உலக சுற்றுச்சூழல் தினத்தில் பசுமைப் புரட்சி
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடந்த 05.06.2026 வெள்ளிக்கிழமை கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் திருமதி. நிருபா பிருந்தன் அவர்களின் தலைமையிலும் ஒழுங்கமைப்பிலும் புலிபாய்ந்தகல் கிரான் குளத்தினை சுற்றி “மூங்கில் மரநடுகை" நிகழ்வு மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்புடனும் நடைபெற்றது.
பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காற்றின் தரத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவித்தல் மற்றும் புவி வெப்பமயமாதலின் தாக்கங்களைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் பசுமைப் புரட்சியின் வாயிலாகப் பருவநிலை மாற்றத்தைத் தணிக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
பசுமை நிறைந்த எதிர்காலத்தை நோக்கி எடுக்கப்பட்ட இந்த முயற்சி, இயற்கையுடனான மனிதனின் உறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான அடையாளமாக அமைந்துள்ளது.















