கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பொங்கல் விழா - 2019

திகதி: 17.01.2019 , காலை :9.30
கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகத்தின் பொங்கல் விழா 17.01.2019 அன்று வியாழக்கிழமை கோரகல்லிமடு மட்/க.கு. ரமண மகரிஷி பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் திரு.சு. ராஜ்பாபு அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் படிக்க: கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பொங்கல் விழா - 2019
நிவாரணப்பொருட்களை சேகரிக்கும் பணி


வடமாகாணத்தில் தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேவையினை வழங்குவதற்காக கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலக பிரிவின் கிராம அபிவிருத்தி சங்கங்கள்,மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் வியாபார நிறுவனங்கள், தனவந்தர்கள், மற்றும் பொதுமக்களிடமிருந்து நிவாரணப்பொருட்களை சேகரிக்கும் பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது
தேசிய பாதுகாப்பு தின நினைவேந்தல் - 26.12.2018
பிரதேச செயலகம், கோறளைப்பற்று தெற்கு , கிரான்
சுனாமி பேரலை பேரழிவு தாக்கம் இடம்பெற்று 14 ஆண்டுகள் நிறைவு மற்றும் தேசிய பாதுகாப்பு தினத்தினையும் முன்னிட்டு கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திரு.சு.ராஜ்பாபு அவர்களின் தலைமையில் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு அந்நாளில் காவுகொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான உயிர்களின் ஆத்ம சாந்திக்காக 02 நிமிட நேர மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு பின்னர் அனர்த்த நிலைமைகளின் போதான முன்னாய்த்த செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு உரை பிரதேச செயலாளரினால் நிகழ்த்தப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.
மேலும் படிக்க: தேசிய பாதுகாப்பு தின நினைவேந்தல் - 26.12.2018














